புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கொழும்பு, மவுன்ட்லாவன்யா ஹோட்டலுக்கு அருகிலுள்ள பிரதான வீதியில் விபசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 3 பெண்கள் உட்பட நபர் ஒருவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
மவுன்ட்லாவன்யா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது காரை பயன்படுத்தி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் உட்பட 3 பெண்கள் கொழும்பு, மவுன்ட்லாவன்யா ஹோட்டலுக்கு அருகிலுள்ள பிரதான வீதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது மேற்படி நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

கண்டி, மாதம்பே மற்றும் பலப்பிட்டிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவர்களை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top