புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவின் பிரபலமான தந்தையாக நடிகர் ஷாரூக்கான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியாவின் பிரபலமான தந்தையாக ஹிந்தி நடிகர் ஷாரூக் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட்டின் பிரபல நடிகரான ஷாருக்கானுக்கு ஆர்யன் என்ற மகனும், சுஹானா என்ற மகளும் இருக்கின்றார்கள்.

சிறந்த தந்தை மகன் உறவு முறையிலும் அவர்களே முன்னிலையில் உள்ளனர். சுமார், 11,000 பெண்கள் கலந்து கொண்ட இந்த வாக்கெடுப்பில் 34.83 சதவீகித வாக்குகளை பெற்று ஷாருக்கான் முதலிடம் பெற்றுள்ளார்.

31.58 சதவிகிதம் பெற்ற அமிதாப்பச்சன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 18.61 சதவிகிதம் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top