கனடாவிலுள்ள பிரம்டன் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 40 வயதுடைய கோபிநாத் தங்கவேலு என்பவரும் அவரது 5 வயதான மகளான ஆரணியும் பலியானர்கள்.
காரில் இவர்களோடு பயணித்த தாயும், மூன்று வயது மகளும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் மூன்று வயதான மகளின் நிலைமையும் ஆபத்தாகவுள்ளதாகவும், தாயார் கண்ணில் சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பிற்பாடு வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.
ஐந்து பிள்ளைகளையுடைய இந்த குடும்பத்தினரின் மூத்த மகனான 17 வயதுடைய கீர்த்தி இந்த விபத்தைப் பற்றிக் கூறுகையில்,
“நான் எனது மற்றைய சகோதரிகளினதும் எனது குடும்பத்தினதும் வாழ்க்கையை இனி எடுத்துச் செல்வதற்காக உறுதியான மனப்பான்மையுடன் இருக்க வேண்டியதை உணர்ந்து அதற்கான திடத்துடன் இருக்கிறேன்” என்று தெரிவித்ததுடன்,
தனது தந்தை தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் “தந்தையர் தினத்தை” கொண்டாடுவதற்கு முதல்நாள் அவர் இறந்தது மிகவும் வருத்தமானது என்றும் இறந்த தனது சகோதரி தன்னோடு எப்போதும் விளையாடுபவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்து:
கருத்துரையிடுக