தந்தை திட்டியதன் காரணமாக 14 வருடங்கள் தந்தையை விட்டுப் பிரிந்திருந்த மகன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பீகாரில் முங்கேர் மாவட்ட கத்வார் கிராமத்தை சேர்ந்த அரிபுரம் என்பவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளன.
1999ல் தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் கோபம் கொண்ட அரிபுரம் வீட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தான் செல்ல முயன்ற அவரை அந்நாட்டின் எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்து லக்பத் சிறையில் அடைத்தனர்.
கடந்த 2007ல் பாகிஸ்தான் விடுதலை செய்த இந்திய கைதிகளில் அரிபுரமும் ஒருவர்.
அவருடைய நிலையைக் கண்ட இந்திய ராணுவத்தினர் அமிர்தசரசில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது தன்னைப் பற்றிய விவரங்களை, மருத்துவமனை ஊழியர்களிடம் அவர் கூறினார்.
மருத்துவமனையின் இயக்குநர், கோயல் உடனே நோயாளி அரிபுரத்திற்கு உதவும்படி பஞ்சாப் மாநில அரசுக்கு கடிதம் எழுதியதனால், அரிபுரம் குறித்த விபரங்களை பீகார் அரசுக்கு, பஞ்சாப் அரசு அனுப்பியது.
பீகார் அரசும் அரிபுரத்தின் தந்தைக்கு தகவல் அனுப்பியது. தன் மகன் உயிருடன் இருப்பதை அறிந்த தந்தை மகிழ்ச்சியுடன் அமிர்தசரசிற்கு வந்து தன் மகனின் நிலையைக் கண்டு கண்ணீர் வடித்தார்.
அரிபுரமும் தன் தந்தையை அடையாளம் கண்டார். இருப்பினும் முழுமையாக குணமடைந்த பின்னரே தந்தையுடன் அரிபுரம் அனுப்பப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக