புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்த சினேகா- பிரசன்னாவுக்கு காதல் பற்றிக் கொண்டது.
அதன் பின் அடிக்கடி போன் மூலமாக காதலை வளர்த்து
வந்தார்கள்.

ஆனால் இந்த காதல் சமாச்சாரம் வெளியில் கசிந்தால் தனது சினிமா கேரியர் பாதிக்கும் என நினைத்த சினேகா, பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் விளம்பர படங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.

இருப்பினும், மீண்டும் படத்தில் இணைந்து நடிக்க முடியவில்லையே என வருத்தத்தில் இருக்கிறாராம் சினேகா.

இதற்கு காரணம் அவர்கள் நடித்த விளம்பரபட நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருப்பதுதான்.

சிலர் உங்கள் இருவரது நடிப்பில் அதிக அந்நியோன்யம் தெரிகிறது, நடிப்பும் இயல்பாக உள்ளது என்றும் சான்றிதழ் வழங்கியுள்ளனராம்.

இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் சினேகா, இந்த வேகத்தோடு சினிமாவில் மீண்டும் காதல் கணவர் பிரசன்னாவோடு ஜோடி சேர்ந்து நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்.

தனது இந்த விருப்பத்தை அபிமான இயக்குனர்கள் சிலரிடமும் வேண்டுகோளாக வைத்து வருகிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top