புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


புத்தளம் மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக சிலாபம் நகரம் நீரில் நேற்று (19) மூழ்கியது. சிலாபம் பஸ் தரிப்பிடம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் நீர்ல் மூழ்கின. சிலாபம் நகரில் இருந்து உள் செல்லவோ வெளியேறவோ
முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் 300 நோயாளர்களை திடீரென இன்று (20) இடமாற்றம் செய்ய வைத்தியசாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வைத்தியசாலை வளாகம் நீரில் மூழ்கியதால் அதன் இயல்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் 300 நோயாளர்களை இன்று (20) காலை மாரவில, ராகம மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை என்பவற்றுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top