விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துவரும் படத்தில் சமீபத்தில் அவருடைய காலில் முறிவு ஏற்பட்டது. இதற்கான வீடியோவை தற்போது படக்குழுவினர் யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர்.
பில்லா-2 படத்திற்கு பின்பு அஜித் இன்னும் பெயர் வைக்கப்படாத படம் ஒன்றில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, விதார்த் என முக்கிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்கின்றார்.
மும்பை, கர்நாடகா என படப்பிடிப்புகள் நடந்துவரும் நிலையில் சமீபத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. உடனே அதற்குரிய முதலுதவி சிகிச்சைகள் கொடுக்கப்பட்டாலும் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யுமளவிற்கு இந்த காயம் ஏற்பட்டிருப்பதாக அஜித்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக