விஸிலிருந்து வெளிவரும் சுவான்சிக் மினுட்டன் பத்திரிகை இன்று சுவார்சியமான கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியும் என நம்புகிறீர்களா என தனது வாசகர்களிடம் அப்பத்திரிகை கேட்டிருந்தது.
30ஆயிரம் வாசகர்களிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் 3வீதமானவர்கள் நிட்சயமாக உலகம் அழியப்போகிறது. அன்றுதான் உலகத்தின் கடைசிநாள் என்று உறுதியாக சொல்லியிருக்கிறார்கள். 3வீதமானவர்கள் அன்று பெரிய பாதிப்பு ஒன்று வரலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். முழுமையாக உலகம் அழியுமா அல்லது சில பகுதிகளில் அழிவு ஏற்படுமா தெரியாது. ஏதோ நடக்கப்போகிறது என கூறியிருக்கிறார்கள். 4 வீதமானவர்கள் இதுபற்றி சரியாக தெரியவில்லை என சொல்லியிருக்கிறார்கள்.
21வீதமானவர்கள் உலகம் அழியும் என்பதற்கு சரியான ஆதாரங்கள் இல்லை, அதற்கான சாத்தியம் இல்லை என தெரிவித்திருக்கிறார்கள். 69வீதமானவர்கள் உலகம் அழியும் என்பது முட்டாள்தனமானது. உலகம் அழியாது என உறுதியாக சொல்லியிருக்கிறார்கள். உலகம் அழியுமா என்ற கேள்வியே ஒரு முட்டாள் தானமானது. ஏன அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே 6வீதமானவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை உலகில் ஏதோ நடக்கப்போகிறது என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.
உலகம் அழியப்போகிறது என நம்புபவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டபோது உலகம் அழியும் என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பது தெரியவந்ததாக அப்பத்திரிகை கூறுகிறது.
உலகம் அழியப்போகிறது அதனால் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. வருடாவருடம் மனைவிக்கு புது ஆடை எடுத்து கொடுப்பேன். ஆனால் இம்முறை கிறிஸ்மஸிற்கென எதுவும் வாங்கவில்லை என ஒரு குடும்பதலைவர் தெரிவித்திருக்கிறார்.
தனது அறையை கூட துப்பரவு செய்யாமல் தனது மகன் இருக்கிறான். ஏன் என்று கேட்டால் உலகம் அழியப்போகிறது. உலகம் அழியாமல் இருந்தால் அதன் பின் துப்பரவு செய்கிறேன் என சொல்கிறான் என ஒரு தந்தை கூறியிருக்கிறார்.
உலகம் அழியப்போகிறது என நம்புபவர்களிடம் டிசம்பர் 21ஆம் திகதி என்ன செய்வீர்கள் என கேட்கப்பட்ட போது மனைவியுடன் சந்தோசமாக இருப்பேன் என 54வீதமானவர்களும், தன் காதலர்களை சந்தித்து குட்பாய் சொல்லி விடைபெறுவேன் என்று 34 வீதமானவர்களும், தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்திருப்போம் என 19வீதமானவர்களும், நிறைய மது அருந்தி விட்டு மயக்கத்தில் இருப்பேன் என 18வீதமானவர்களும், நிலத்திற்கு கீழ் உள்ள சுரங்க அறைகளில் பதுங்கியிருப்போம் என 18வீதமானவர்களும் சொல்லியிருக்கிறார்கள்.
நீங்கள் இந்த உலகில் வாழ்ந்ததில் திருப்தி கொள்கிறீர்களா என கேட்கப்பட்ட போது 14வீதமானவர்கள் மட்டும் ஆம் திருப்தி அடைகிறோம் என சொல்லியிருக்கிறார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக