புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் 36 பேர்
காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 15 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 68 ஆயிரத்து 904 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 66 ஆயிரத்து 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 5 ஆயிரத்து 231 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 753 பேர் 102 தற்காலிக நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 358 வீடுகள் முழுமையாகவும் ஆயிரத்து 907 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top