புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இவர் ரொறன்ரோ நகரத்தின் வரவு செலவுத் திட்டக் குழுவின் தலைவராவார். நீண்ட நாட்களாக நகரசபை உறுப்பினராக இருக்கும் மைக் டெல் கிராண்டே இவர் இரண்டரை வாரங்கள் விடுமுறைக்குச் செல்வதனால் தனது
மின்னஞ்சலிற்கு முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களிற்கு இவர் ஏற்கனவே பதிவு செய்துள்ள தானியக்க பதில்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

என்ன அப்படி தனது தானியக்க மின் அஞ்சல் பதிலில் எழுதி வைத்துள்ளார் என்று பார்க்கிறீர்களா? இது தான் அவர் எழுதியுள்ளது.
எனக்கு அடுத்த இரண்டரை வாரங்களிற்கு அனுப்பப்படும் எந்த மின்னஞ்சலையும் நான் பார்வையிட மாட்டேன். நான் நகரில் தான் இருக்கப் போகிறோன் ஆனால் எனக்கு பிடித்த செய்ய வேண்டிய வேலைகளைச் செய்வதிலேயே நான் இந்தக் காலத்தைக் கழிப்பேன்.

எனவே ஜனவரி மாதம் 06ம் திகதிக்குப் பிற்பாடு எனக்கு மின்னஞ்சல்களை அனுப்புங்கள். இப்போது அனுப்பினார்கள் ஆனால் அது மின்னஞ்சல் குப்பைத் தொட்டிக்குள்ளே போய் விடும்.

எனது அலுவலக உதவியாளர்கள் ஏதாவது பிரச்சினை என்றால் அவற்றை கவணிப்பதற்கு உதவுவார்கள். அதற்காகத் தான் அவர்களிற்கு சம்பளம் வழங்கப்படுகிறது. உங்கள் அனைவருக்கும் நத்தார் வாழ்த்துக்கள்.

மாயன் தங்களது காலக் கணிப்பில் பிழைவிட்டு (டிசம்பர் 21ல் உலகம் அழியாவிட்டால்) உங்களிற்கு 2013ம் ஆண்டு புதுவருட வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மிகவும் உபசரிப்பில்லாத தன்மையதாக இருந்த இந்த மின்னஞ்சல் குறித்து அவரிடம் வினவ அவரது மின்னஞ்சலிற்கு ஒரு பத்திரிகை தொடர்பு கொண்ட போதும் அவர் பதிலளிக்கவில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top