விஜய்யுடன் நடித்த துப்பாக்கி படம் ஹிட்டான மகிழ்ச்சியில் இருக்கிறார் காஜல் அகர்வால்.
தெலுங்கில் 4 படங்கள் கைசவம் உள்ளன. கார்த்தியுடன் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றி்ல் கலந்து கொண்ட காஜல் அகர்வால் அளித்த பேட்டியில், தமிழ், தெலுங்கில் எனக்கு நல்ல படங்கள் அமைந்துள்ளன. இதற்கு கடவுள்தான் காரணம்.
திருமணம் எப்போது, யாரை மணப்பீர்கள் என்றெல்லாம் பலரும் என்னிடம் கேட்கின்றனர். திருமணம் செய்து கொள்வதற்கு மனதுக்கு பிடித்த மனிதரை இன்னும் நான் சந்திக்கவில்லை.
நடிகர்கள் உள்ளிட்ட சினிமாவில் இருக்கும் எவரையும் மணந்து கொள்ள மாட்டேன்.
தொழிலதிபர் ஒருவரை மணப்பேன். என்னையும் எனது குடும்பத்தையும் பார்த்துக் கொள்பவராக இருந்தால் காதல் திருமணம் செய்வேன். இல்லாவிட்டால் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டுவேன்.
உலகம் நாளை அழிந்து விடும் என்கிறார்கள். அதை நான் நம்ப மாட்டேன்.
உலகம் கண்டிப்பாக அழியாது என்றும் விளம்பரத்துக்காக இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக