நாட்டின் சில பகுதிகளில் மீன் மழை பெய்தமை தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது மழையுடன் முதலைக் குட்டியொன்று வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் திஸ்ஸ மஹாராம பிரதேசத்தில் மழையுடன் இறால்கள் வீழ்ந்ததாகத்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது மாத்தறை சுல்தானாகொட கெகில்ல பிரதேசத்தில் பாரிய மழையுடன் முதலைக் குட்டியொன்று வீழ்ந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கே. பியதிஸ்ஸ என்வரின் வீட்டுக் கிணற்றிற்கு அருகாமையில் இந்த முதலைக் குட்டி வீழ்ந்துள்ளது.
இந்தக் கிராமத்திற்கு அருகாமையில் முதலைகள் வாழும் எந்தவொரு குளமோ அல்லது வேறும் நீர் நிலைகளோ கிடையாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கிராமத்திற்கு இதற்கு முன்னர் முதலைகள் வந்தததில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக