புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாளை (21ம் தேதி) உலகம் அழியும் என பரவி வரும் தகவலால் தர்மபுரியில் வியாபாரி ஒருவர் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வந்து மக்களுக்கு விநியோகித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மாயன் காலண்டரில் 21-12-2012 தேதிக்கு பின்னர் தேதி பொறிக்கப்படவில்லை. எனவே அன்றைய தினத்துடன் உலகம் அழிந்து விடும் என்ற கருத்து கடந்த சில திங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் பரவியது. இது ஒரு சிலரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகம் அழியும் என்று ஒரு தரப்பினரும், அழியாது என்று மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பரிகார பூஜைகளும், வீடுகளில் பெண்கள் 3 விளக்குகள் ஏற்றியும் உலகம் அழியக் கூடாது என சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த கரும்பு வியாபாரி குழந்தைதம்பி (55), 21ம் தேதியுடன் உலகம் அழியப்போகிறது என்றும் அதனால் இப்பகுதி மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என கூறி நேற்று வங்கியில் இருந்து 1 லட்சம் பணத்தை எடுத்து வந்து அப்பகுதி மக்கள் சிலரிடம் 1000, 2,000 என விநியோகம் செய்தார்.

மேலும் அவர் மக்களிடம் கூறும்போது, வரும் 21ம் தேதியுடன் உலகம் அழியப் போகிறது. அதனால் நீங்களும் உங்கள் குழந்தைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உலகம் அழிந்து விட்டால் நிறைவேறாத ஆசைகளால் ஆத்மா சாந்தியடையாது. எனவே உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுங்கள். ஒருவேளை 21ம் தேதி உலகம் அழியாவிட்டால் இந்த பணத்தை திருப்பி கொடுங்கள் என கூறியுள்ளார்.

இந்த தகவல் பரவியதையடுத்து தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவரை பார்க்க சென்றனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top