ஓடும் பேருந்தில் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டு உயிருக்கு போராடும் மருத்துவ மாணவி தான் வாழ விரும்புவதாக தனது தாயிடம் ஒரு துண்டுச்சீட்டில் எழுதிக் காண்பித்துள்ளார்.
டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவி கற்பழிக்கப்பட்டார்.
டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு நேற்று 5வது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த கும்பல் அவரை இரும்புக் கம்பியால் தாக்கியதில் அவரது குடல் பெரிதும் சேதமடைந்தது. இதையடுத்து நேற்று காலை அவருக்கு 5வது முறையாக அறுவை சிகிச்சை செய்து குடல் பகுதியில் 15 இன்ச் அளவு நீக்கப்பட்டது.
முன்னதாக அந்த மாணவி ஒரு துண்டுச் சீட்டில் தான் வாழ விரும்புவதாக எழுதி தனது தாயிடம் காண்பித்துள்ளார். அறுவை சிகிச்சைப் பிறகும் அவரது உடல் நிலை மோசமாகத் தான் உள்ளது. அறுவை சிகிச்சை செய்யும் அறைக்கு அழைத்துச் செல்லும் முன்பு அவர் தனது தாய் மற்றும் சகோதரனுடன் பேசியுள்ளார்.
ஆனால் அவரது தந்தை அவரைப் பார்த்து பேசவில்லை. அவரது குடல் பகுதி பெரும் சேதம் அடைந்திருப்பதால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் நரம்புகள் வழியாகத் தான் உணவு ஏற்ற வேண்டும்.
ஆனால் அது முக்கியமில்லை. தற்போது அவரது உயிரைக் காப்பாற்றவே போராடுகிறோம் என்று டாக்டர் அத்தானி தெரிவித்தார்.
முன்னதாக கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் அந்த கும்பலில் தன்னுடன் இருந்த ஒருவர் அப்பெண்ணின் வயிற்றில் இருந்து கயிறு போன்ற ஒன்றை உருவியதாகத் தெரிவித்தார். அது கயிறல்ல அப்பெண்ணின் குடல் என்று நினைக்கிறேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக