சிலாபம் பிரதான வைத்தியசாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதைத் தொடர்ந்து, அவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சுமார் 300 நோயாளர்களை ஏனைய
வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாரவில, இறாகம, கொழும்பு ஆகிய வைத்தியசாலைகளுக்கே இந்நோயாளிகளை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தெதுரு ஓயாவும் முன்னேஷ்வரம் குளமும் பெருக்கெடுத்துள்ளதால் வெள்ளநீர் சிலாபம் வைத்தியசாலையினுள் நேற்று புதன்கிழமை இரவு புகுந்துள்ளது. அனைத்து வார்ட்டுக்களிலும் சுமார் 2 அடி உயரத்தில் வெள்ளநீர் நிறைந்து காணப்படுகின்றது.
சிலாபம் வைத்தியசாலையின் கீழ் மாடியிலிருந்த அனைத்த நோயாளிகளும் மேல் மாடிக்கு மாற்றப்பட்டனர். இரத்த வங்கி மற்றும் மருந்துக் களஞ்சியசாலைகளையும் பாதுகாக்கும் பணியில் வைத்தியசாலை ஊழியர்கள் ஈடுபட்டுவருவதாக அவ்வைத்தியசாலையின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை, வைத்தியசாலைக்கான மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.

0 கருத்து:
கருத்துரையிடுக