கனடாவின் ரொறான்ரோவை இந்த வார இறுதியில் குளிர்காலப் பனிப் புயல் தாக்க வாய்ப்பிருக்கிறது என்று வானிலை மையம் தகவல் தெரிவிக்கிறது.
ஒரு குறைந்த காற்றழுத்த மண்டலம் தென் ஒண்டோரியோவை நோக்கி வந்துக் கொண்டிருப்பதாகவும் அது கடுமையான பனிப் பொழிவாக உருமாறலாம் என்று அந்த அறிக்கை சொல்லுகிறது.
வியாழன் அன்று கடுமையான பனிப் பொழிவும் மழையும் இருக்க வாய்ப்பிருக்கிறதாம். வெள்ளி காலையிலிருந்து மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்றும் அந்தத் தகவல் குறிப்பிடுகிறது.
வெள்ளி மாலையிலிருந்து மழைக் குறைந்து பனிப் பொழிவாய் மாறிவிடும் என்றும் கடுமையான குளிர் இருக்கும் என்றும் தெரிகிறது.
வியாழனிலிருந்து சனிக்கிழமைக்குள் மூன்று செண்டிமீட்டர் பனிப் பொழிவு இருக்கும் என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் பனிப் பொழிவு குறைந்து விடும் என்றும் சொல்லப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக