புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


டொரொண்ட்டோவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 15 வயதுச் சிறுவன் ஒருவன் பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டதில் உயிரிழந்தான்.


ஒயிட்சைட் பிளேஸ் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 13வது மாடியில் ஒரு பையன் சுடப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

அந்தக் கட்டிடத்தில் “லிஃப்ட்” இயங்காததால் அவனை மருத்துவ உதவியாளர்கள் படிக்கட்டு வழியாகத் தரையிறக்கினர். ஆனால் அவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தான். கடந்த 2010ம் ஆண்டில் இதே கட்டிடத்தில் இரண்டு பதின்வயது இளைஞர்கள் மதுவிருந்து முடிந்து வெளியே வந்தபோது சுடப்பட்டதால் உயிரிழந்தனர்.

அந்தக் குடியிருப்பில் வாழும் ஷௌனா மியா (15) என்ற இளம்பெண்ணிடம் இதுகுறித்து விசாரித்தபோது, “துப்பாக்கிச்சூடு என்பது இங்கு சர்வ சாதாரணமானது. அடிக்கடி நடந்து கொண்டு தான் இருக்கிறது” என்று கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top