கனடாவில் கிவாய் ஹானஸ் தேசிய பூங்காவில் மூன்று மாதங்களுக்கு பின்னர் இரண்டு வெந்நீர் ஊற்றுகள் தோன்றியுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தநிலையில் கிவாய் ஹானஸ் தேசிய பூங்காவில் இருந்த வெந்நீர் ஊற்றுகள் அதன் பின்னர் மறைந்து போயின.
இந்த நிலையில் மூன்று மாதங்களுக்குப் பின்னர், நேற்று முன்தினம் இரண்டு வெந்நீர் ஊற்றுகள் தோன்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊற்றுக்கு மருத்துவ பண்புகள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.சிலர் இந்த ஊற்றில் கடல் உணவை வேக வைத்தும் சாப்பிடுகின்றனர். எனினும், இந்த ஊற்றுகள் முன்னைய அளவை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.!
0 கருத்து:
கருத்துரையிடுக