பாலியல் வன்முறைக்கு ஆளான ஒரு பெண் மருத்துவ சிகிச்சைக்காகச் சென்ற போது உரிய மருந்தோ ஆலோசனையோ வழங்காமல் அலைக்கழித்த கத்தோலிக்க மருத்துவமனைகளால்
சர்ச்சை எழுந்துள்ளது.
இது குறித்து ஜேர்மன் மருத்துவர் கழகம் St vinzenz - Krankenhaus மற்றும் Heilig - Geist - Krankenhaus என்ற அந்த இரண்டு மருத்துவமனைகளையும் கடுமையான விமர்சித்துள்ளது.
கடந்த மாதம் கோலோன் நகரில் நடந்த மதுபான விருந்தில் அதிகமாகக் குடித்து மயங்கிக் கிடந்த 23 வயது இளம்பெண்ணை மர்மநபர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினர்.
காலையில் மயக்கம் தெளிந்து பார்த்தபோது அவள் கால்க் மாவட்டத்தில் ஒரு ஆற்றங்கரையோரமாகக் கிடப்பது தெரிந்தது.
இதனையடுத்து அந்த பெண் அருகிலிருந்த கத்தோலிக்க மருத்துவமனைக்குச் சென்றபோது, அவர்கள் அங்கிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அந்த மருத்துவமனையிலும் அவளுக்கு மருந்தோ ஆலோசனையோ வழங்கவில்லை. வேறு மருத்துவமனைக்குப் போகுமாறு அறிவுறுத்தினர்.
இது குறித்து கோலோன் கத்தோலிக்கப் பேராயத்திடம் கேட்டபோது, அவசரகால கட்டத்தில் கூட கருத்தடை செய்வதோ கருச்சிதைவு செய்வதோ கிடையாது என்பது கத்தோலிக்க மருத்துவமனைகளின் பொதுவான கொள்கையாகும்.
இந்தப் பெண்ணுக்கு இதுதவிர வேறு சிகிச்சைகள் தேவைப்படுமாயின் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியிருக்கலாம் என்று தெரிவித்தது.
நேற்று Marleurger Bund என்ற மருத்துவர் கழகம் (MB), கடமையைச் செய்யத்தவறிய மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்துள்ளது.
MB கழகத்தின் தலைவரான ருடோல்ஃப் ஹென்கே, இப்பெண்ணுக்கு ஆலோசனை வழங்கியிருக்கலாம் என்றார்.
மேலும் மருத்துவமனை மேலாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இடையிலான புரிதல் இன்மையே இப்பிரச்னைக்குக் காரணமாயிற்று என்றும் தெரிவித்தார்.
நார்த் ரைன் - வெஸ்ட்ஃபேலியா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சகம், கத்தோலிக்க மருத்துவமனைகள் சட்டத்தை மீறிச் செயல்பட்டனவா என்பதை அறிய விசாரணை தொடங்கியிருப்பதாக தெரிவித்தது.
0 கருத்து:
கருத்துரையிடுக