ஊர்காவற்றுறையில் 15 வயது சிறுமியை ஏமாற்றி நான்கு இளைஞர்கள் மாறி மாறி பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது.
குறித்த சிறுமி கர்ப்பமடைந்ததைத் தொடர்ந்தே இச்சம்பவம் வெளி உலகிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள நான்கு இளைஞர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு தெரியாமல் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தின் பின்னர் இது தொடர்பில் பரிசோதனை செய்த போது சிறுமி கர்ப்பமுற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் பெற்றோர் இது தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையில் முறைப்பாடென்றை செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர். ஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
இவர்களை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் இறங்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 19 வயது 20 வயது இளைஞர்கள் எனத் தெரியவருகின்றது.
இதேவேளை யாழ்ப்பாணத்திலும் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதற்காக 25 வயது இளைஞர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
செட்டிக்குளம் பகுதியிலும் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த கப்பச்சி என்னும் இடத்தைச் சேர்ந்த ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக