சவூதி அரேபிய அரசால் வழங்கப்பட்ட நிதி உதவிகளை அந்நாட்டில் கடந்த இரு வாரங்களுக்கு முன் சிரச் சேதம் செய்யப்பட்ட ரிசானா நபீக்கின் ஏழைத் தாய் முற்றாக நிராகரித்து உள்ளார்.
அத்துடன் ரிசானாவின் மரணத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியவர்கள் இலங்கையிலும் உள்ளார்கள், அவர்களின் உதவிகளும் தேவை இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
உள்நாட்டு இராணுவம், வீடமைப்பு மற்றும் நிர்மாண அமைச்சு ஆகியன ஒவ்வொரு வீடுகளை ரிசானாவின் குடும்பத்துக்கு வழங்க முன் வந்து உள்ளன.
அத்துடன் கண்டி மாநகர சபை இவர்கள் புதிய வீட்டில் குடியேறுகின்றமைக்கு தேவையான அனைத்து பொருட்களையும், வசதிகளையும் வழங்க முன்வந்து உள்ளது.
திருகோணமலையில் மூதூரைச் சேர்ந்த ரிசானா வீட்டு வறுமையை போக்குகின்றமைக்காகவே பள்ளிப் படிப்பை உதறி விட்டு சவூதிக்கு பணிப் பெண்ணாக சென்று இருந்தார்.
இவரின் அபிலாஷைகளில் ஒன்று குடும்பத்துக்கு சிறந்த வீடு ஒன்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது.
ஆனால் வேலைக்கு சேர்ந்து இரு வாரங்காளிலேயே எஜமானரின் கைக்குழந்தை புரையேறி இறந்து விட, குழந்தையை பராமரிக்கின்ற கடமையில் அப்போது இருந்த ரிசானா மீது படுகொலைப் பழி வந்து விழுந்தது.
அந்நாட்டு நீதிமன்றம் இவரை படுகொலைக் குற்றவாளியாக கண்டு மரண தண்டனைத் தீர்ப்பு விதித்தது. கடந்த வாரங்களில் இவர் சிரச் சேதம் செய்யப்பட்டார்.
ரிசானாஅவின் குடும்பத்தினர் குடிசை ஒன்றிலேயே வாழ்கின்றனர். ரிசானா மரண தண்டனைக் கைதியாக இருந்தபோதே கொடீஸ்வரர்கள் சிலர் வீடுகளை கட்டிக் கொடுக்க முன்வந்து இருந்தனர். ஆயினும் இவற்றை ரிசானாவின் அம்மா நிராகரித்து விட்டார்.
அன்புக்கு உரிய மகள் பத்திரமாக திரும்பி வருகின்றமையே மிக பெரிய செல்வம் என்று சொல்லி இருக்கின்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக