கும்பகோணம் அருகே உள்ள மாத்தி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(49) டெய்லர். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ராஜேந்திரனின் அக்கா மகள் ரேவதி(29),
இவர் திருமணமான 3 மாதத்தில் கணவனை பிரிந்து இங்கு வந்து ராஜேந்திரன் வீட்டு அருகே தாயுடன் வசிக்கிறார். இந்த நிலையில் ராஜேந்திரனுக்கும், ரேவதிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் ராஜேந்திரனின் மனைவி ஜெயந்திக்கு தெரியவந்தது. அவர் இருவரையும் கண்டித்தார். ஆனாலும் கள்ளக்காதல் தடையின்றி நடந்துவந்தது.
இதனால் ஜெயந்தி, கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கள்ளக்காதல் ஜோடியை அழைத்து புத்திமதி கூறி அனுப்பினர். கடந்த 16ம் தேதி காணும் பொங்கல்தினத்தில் ரேவதி, கறி விருந்து தயார் செய்தார். கள்ளக் காதலனுக்கு கறி ஊட்டி விட நினைத்தார்.
ஜெயந்தி வீட்டுக்குள் இருப்பது தெரியாமல், கள்ளக்காதலன் வீட்டுக்குள் வந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயந்தி, ‘நல்ல நாளு அதுவுமா.. வீட்லேயே கச்சேரி பண்ண வந்துட்டியா’ என்று கத்தியபடி விறகு கட்டையை எடுத்து ரேவதியை தாக்கினார். இதைப்பார்த்த கணவன் ஒரு கட்டையை எடுத்து மனைவியை தாக்கினார்.
அப்போது ரேவதியும் சேர்ந்து ஜெயந்தியை தாக்கினார். இதில் ஜெயந்தி மண்டை உடைந்தது. ஆபத்தான நிலையில் அவர் தஞ்சை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் ஜோடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக