புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சமர் படத்தில் நடிகை த்ரிஷா மது அருந்தும் காட்சி இடம் பெற்றுள்ளது. இது குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்ட போது நான் மது அருந்துவது போல் நடித்தால் அந்த படம் வெற்றி பெறுகிறது. எனவேதான் சமர் படத்தில் மது குடிப்பது போல்
நடித்தேன் என்று பதில் அளித்தார்.

பெண்கள் மது அருந்துவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அது அவரவர் விருப்பம் என்று கூறினார்.

திரிஷாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு கண்டனம் தெரிவித்து இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவர் முத்துரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழகத்தில் மது மற்றும் சிகரெட் பழக்கத்தால் இளைஞர்கள் கெடுகின்றனர். மதுவை ஒழிக்க அனைத்து கட்சிகளும் போராடுகின்றன. மதுவின் தீமைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரங்களும் நடக்கின்றன. இவற்றையெல்லாம் தவிடு பொடியாக்குவது போல் திரிஷாவின் பேட்டி அமைந்துள்ளது.

மது அருந்தும் காட்சி இருந்தால் என் படம் ஓடும் என்பது சிறுபிள்ளைத்தனமானது. ஒரு நடிகை ஆபாசமாக நடித்து அப்படம் ஓடினால் அதை சென்டிமெண்டாக கருதி எல்லா படங்களிலும் அந்த காட்சியை வைக்க சொல்வாரா. ரஜினி சிகரெட் பிடித்த படங்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளன. இப்போது சிகரெட் பழக்கத்தை விட்டதோடு இளைஞர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என வற்புறுத்தி வருகிறார்.

மது, சிகரெட் பழக்கத்தால் வரும் தீமைகள் பற்றியும் ரசிகர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் திரிஷாவோ மது குடிப்பது போன்ற காட்சியில் நடித்தால் படம் ஓடும் என்பதால் ஒவ்வொரு படத்திலும் மது அருந்துவது போல் நடிக்கிறேன் என்றார். பெண்கள் மது குடிப்பது அவரவர் விருப்பம் என்றும் சொல்கிறார்.

குழந்தைகளை பெற்றெடுப்பவர்கள் பெண்கள். பெண்மை போற்றத்தக்கது. அவர்கள் மது பழக்கத்துக்கு அடிமையாக கூடாது என்று திரிஷா சொல்லி இருந்தால் பாராட்டி இருக்கலாம்.

மாறாக குடிப்பது அவரவர் விருப்பம் என்று கூறுவதன் மூலம் பெண்கள் மது அருந்த தூண்டுகிறார். திரிஷா தனது கருத்து க்களை வாபஸ் பெற வேண்டும் இல்லையேல் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்’’என்று கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top