திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்கும் மாணவி கழிவு நீர்த்தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக பள்ளி முதல்வர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஊத்தங்கரை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன்.இவரது மனைவி பவித்ரா. இவர்களது மகன் பிரவீன் (5). மகள் மாலதி (4). ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் அமைந்துள்ள தனியார் மெட்ரிக் பள்ளிக்கு நேற்று வழக்கம் போல் சென்றனர்.
பிற்பகல் 3.30 மணியளவில் பள்ளி இடைவேளையின்போது எல்.கே.ஜி. படித்து வந்த மாலதி சிறுநீர் கழிப்பதற்காக வகுப்பறைக்கு பின்புறமாக சென்றுள்ளார்.
அப்போது அங்கு திறந்து கிடந்த கழிவு நீர்த் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். சிறுமிக்கு துணையாக சென்ற அவளது அண்ணன் பிரவீன் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து கதறியபடி வகுப்பறைக்கு ஓடிவந்து ஆசிரியைகளிடம் கூறினான்.
உடனே இதுகுறித்து ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் கழிவு நீரை வெளியேற்றி சிறுமியை சடலமாக மீட்டனர்.
பள்ளியின் கவனக்குறைவால் இந்த சம்பவம் இடம்பெற்றதையடுத்து ஊத்தங்கரை பொலிசார் வழக்கு பதிவு செய்து, பள்ளி முதல்வர் மெர்சி (38), நிர்வாக அலுவலர் பிரபாகர் (44), மெர்சியின் சகோதரர் ஸ்டீபன் (35), விடுதி வார்டன் ரமேஷ் (26) ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். சிறுமி பலியான சம்பவத்தையடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக