புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தாய்லாந்து அரச குடும்பத்தை விமர்சித்த, நகைச்சுவை நடிகருக்கு, இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தாய்லாந்து நாட்டில், பூமிபால் அதுல்ய தேஜ் மன்னராக உள்ளார். 2009ம் ஆண்டு முதல், உடல் நலக்குறைவு
காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீது, தாய்லாந்து மக்கள் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்துள்ளனர். 2010ம் ஆண்டுபாங்காக்கில் நடந்த, கண்டன பேரணியில், நகைச்சுவை நடிகர், யொசாவரிஸ் சக்லோமி,என்பவரும் பங்கேற்று, மன்னர் குடும்பத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்.இதை அடுத்து, அவர் மீது, பாங்காக் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அவருக்கு, இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top