அமெரிக்காவின் மியாமியில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரமான மியாமி சர்வதேச விமான நிலையத்தில் 350 பயணிகளுடன் ஏர்பிரான்ஸ்
விமானம் பாரிசுக்கு புறப்பட தயாராக இருந்தது.
அப்போது 240 பயணிகளுடன் அங்கு தரையிறங்குவதற்காக கீழ்நோக்கி வந்த அர்ஜெண்டினா விமானம், ஏர் பிரான்ஸ் விமானத்தின் மேல்பகுதியில் மோதியபடி ஓடுதளத்தில் இறங்கியது.
இதில் ஒரு விமானத்தின் இறக்கையும், மற்றொரு விமானத்தின் வால் பகுதியும் சேதமடைந்தது.
சம்பவம் நடந்த உடனே மீட்புக்குழுவினர் விரைவாக செயல்பட்டு, இரு விமானங்களிலும் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக