ஜெர்மனியில் முதியவருக்கு ஆபரேஷன் செய்த டாக்டர்கள் 16 பொருட்களை உள்ளே வைத்து தைத்ததாக புகார் எழுந்துள்ளது. ரூ.58 லட்சம் நஷ்டஈடு கேட்டு உறவினர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஜெர்மனியின் ஹானோவர் நகரில் வசித்தவர் ஹெல்மட் பிரெச். வங்கியில்
பணியாற்றி ஓய்வு பெற்றவர். பிராஸ்டேட் கேன்சரால் பாதிக்கப்பட்ட இவருக்கு உள்ளூரில் உள்ள ஆஸ்பத்திரியில் 2009ல் ஆபரேஷன் செய்யப்பட்டது. அதன் பிறகும் வலி குறையவில்லை. இதையடுத்து, மீண்டும் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார்.
எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டன. அவரது உடலில் ஊசி, ஆபரேஷன் கருவிகள், பஞ்சு போன்றவை இருப்பது தெரியவந்தது. இன்னொரு ஆபரேஷன் செய்து அவற்றை டாக்டர் அகற்றினர். அவரது உடலில் மொத்தம் 16 பொருட்களை டாக்டர்கள் வைத்து தைத்து விட்டார்கள் என்று அவரது வக்கீல் கூறியிருக்கிறார். இதற்கிடையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஹெல்மட் 77 வயதில் கடந்த ஆண்டு மரணம் அடைந்தார்.
கவனக்குறைவாக ஆபரேஷன் செய்த ஆஸ்பத்திரி நிர்வாகம் தங்களுக்கு ரூ.58 லட்சம் நஷ்டஈடு தரவேண்டும் என்று ஹெல்மட் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த புகாரை ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது. எங்கள் ஆஸ்பத்திரியிலேயே இல்லாத பொருட்கள், கருவிகள் அவரது உடலில் இருந்தன. அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்று கேட்கிறார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக