இலங்கையிலிருந்து பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதை நிறுத்துமாறு கோரி மூதூர் பிரதேசத்தில் கையெழுத்து வேட்டை இடம்பெற்றுள்ளது.
மூதூர் பீஸ் - ஹோம் நிறுவனத்தோடு இணைந்து மூதூரில் செயற்படும் மஜ்லிஸ் அஸ் - ஸுறா, உலமா சபை, கதீப்மார்கள் நலன்புரிச் சங்கம் மற்றும் தடயம் சமூக அபிவிருத்தி மையம் ஆகியன ஒன்றிணைந்து இக்கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டுள்ளன.
பணிப்பெண்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தடுக்கும் முகமாகவும், சமூகத்தில் ஏற்படுகின்ற கலாசார சீரழிவுகளை தடுக்கும் வகையில் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதனை நிறுத்தக்கோரி கையெழுதக்கள் பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பத்தாயிரம் பேர்களின் கையெழுத்துடன் அரசாங்கத்திற்கு மகஜர் ஒன்றை அனுப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக