உலகின் மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 2-வது இடத்தை எட்டியுள்ளது. விரைவில் பிரேசிலிடம் இருந்து முதல் இடத்தை இந்தியா தட்டிப் பறிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தரவை மாட்டு இறைச்சி என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் உண்பார்கள்.. அதை உண்பது இழிவானது என்ற ஆதிக்க சாதி மனோபாவம் இருக்கிறது. அதே நேரத்தில் பசு மாடுகளை தெய்வமாகக் கருதிப் போற்றுகிற வழிபாட்டு மனோநிலையும் இருந்து வருகிறது. ஆனால் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மாட்டு இறைச்சி பிரதான உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. பொதுவாக இந்தியாவில் கறவையை நிறுத்திவிட்ட எருமைகளும் ஆண் மாடுகளும் காளைகளும் இறைச்சிக்காக வெட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒருபக்கம் புனிதமாகப் போற்றப்படும் மாடுகள்.. இன்னொரு பக்கம் மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் முன்னணி இடம் என்ற வினோதமான நிலையை எதிர்கொண்டிருக்கிறது இந்தியா
அமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்களின் படி பிரேசில் 1.52 மில்லியன் டன் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்திருக்கிறது. இந்தியாவின் மாட்டு இறைச்சி ஏற்றுமதி பிரேசிலைவிட சற்று குறைவுதான்..1.45 மில்லியன் டன் தான்.. அனேகமாக நடப்பாண்டில் இந்தியாவுக்கு மாட்டு இறைச்சியில் முதலிடம் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கின்றனர்.
இந்தியாவின் அபார வளர்ச்சிக்கு கை கொடுத்த நாடுகளாக சுட்டிக்காட்டப்படுபவை எகிப்து, மலேசியா. ஆனால் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு இந்திய மாட்டு இறைச்சி ஏற்றுமதியாவதில்லை.
0 கருத்து:
கருத்துரையிடுக