புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆலயங்களில் ,  உடலுறவு கூடாது என்ற எச்சரிக்கை பலகையை வைக்க, இந்தோனேசிய அரசு, முடிவு செய்துள்ளது. இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள, சரசேடா கிராமத்தின், இந்து கோயிலில், பராமரிப்பு பணி நடந்து வந்தது. அதை
பார்வையிட சென்ற உள்ளூர் இளைஞர் குழு தலைவர், கோயிலுக்குள், எஸ்டோனியா நாட்டு காதல் ஜோடி ஒன்று, உடலுறவில் ஈடுபட்டதை கண்டு, அதிர்ச்சியடைந்தார்.அவர்களை பிடித்து விசாரித்தபோது, கோயிலுக்குள் உடலுறவு கொள்ளக் கூடாது என்பது, எங்களுக்கு தெரியாது´ என, அவர்கள் கூறியுள்ளனர்.

வெளிநாட்டினர் என்பதால், விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என, பொலிசார் கேட்டுக்கொண்டனர்.எனினும்,கோயிலின் புனிதம் கெட்டு விட்டதால், அதை புனிதப்படுத்தும் சடங்கு செய்வது என, முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 1 லட்சம் ரூபாய் தர அந்த ஜோடி,ஒப்புகொண்டது.இச்சம்பவத்தை தொடர்ந்து, "புகைபிடிக்க கூடாது´ என, எச்சரிக்கை பலகை வைப்பது போல்,கோயில்களில், "உடலுறவு கூடாது´ என்ற அறிவிப்பு பலகை வைக்க, இந்தோனேசிய அரசு முடிவு செய்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top