இந்தியாவில் ஆற்றில் மூழ்கடித்து குழந்தையைக் கொலை செய்த இளம்பெண்
குழந்தையை ஏரியில் மூழ்கடித்து கொலை செய்த இளம்பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். செங்கல்பட்டு
மதுராந்தகம் சாலையில் நேற்று மாலை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், கைக்குழந்தையுடன் நடந்து சென்றார். இதை அப்பகுதியில் இருந்த பொதுமக்களும் ஆட்டோ டிரைவர்களும் பார்த்துள்ளனர். சிறிது நேரத்தில் அந்தப் பெண் தனியாக நடந்து வந்தார். கையில் குழந்தை இல்லை. இதை பார்த்த பொதுமக்கள், ‘குழந்தை எங்கே’ என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், ‘புதரில் மறைத்து வைத்திருக்கிறேன், பாறை இடுக்கில் வைத்துள்ளேன்’ என மாறிமாறி கூறியுள்ளார்.
சந்தேகம் வலுத்ததால், ‘குழந்தையை எடுத்து வா’ என்று பொதுமக்கள் கூறினர். உடனே அந்தப் பெண் திரும்பி நடக்க ஆரம்பித்தார். அவரை சிலர் பின்தொடர்ந்து சென்றனர். வேம்பாக்கம் ஏரிக்கு சென்ற பெண், முழங்கால் அளவு தண்ணீரில் மூழ்கியிருந்த பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்தார். குழந்தை இறந்துவிட்டது தெரிந்ததும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது, செங்கல்பட்டு அடுத்த வேதநாராயணபுரம் ஊத்தங்குளியை சேர்ந்த ஆறுமுகம் மகள் ஸ்டெல்லி (35) என கூறினார். குமார் என்பவருடன் தனக்கு திருமணமாகி விட்டதாகவும் பைத்தியம் என கூறி தன்னை வீட்டை விட்டு கணவர் துரத்திவிட்டதாகவும் 20 நாட்களுக்கு முன்புதான் குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுபற்றி செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இளம்பெண்ணை செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல மாற்றி மாற்றி பேசுகிறார். அவர் உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவரா, திருமணமாகி விட்டதா, தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட குழந்தை அவருடையதுதானா அல்லது ஏதா வது மருத்துவமனையில் இருந்து தூக்கி வந்தாரா என பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக