புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


லெபனான், பெய்ரூட் நகரில் இலங்கைப் பெண்ணொருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம், பிரதேசத்தைச் சேர்ந்த செல்வி திலீகா பெரேரா (வயது 32) என்ற இளம் பெண்ணே கூரிய ஆயுதத்தால் குத்தியும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரது சடலம் பெய்ரூட் நகரில் வீதியோரமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பணிப்பெண்ணாக லெபனான் சென்ற இவர் பல இடங்களில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்துள்ளார். மேலும் அங்கு சப் ஏஜெண்டாகவும் செயற்பட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து பணிப்பெண்களுக்கு வேலைவாய்ப்புகளையும் இவர் பெற்றுக் கொடுத்துள்ளார் என்றும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மர்மமான முறையில் இவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கும் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top