புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


 மலையுச்சியில் தனியாக இருந்த போது கடவுளை கண்டதாக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம் கேர்ரி கூறியுள்ளார்.

த மாஸ்க், ட்ருமேன் ஷோ போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜிம் கேர்ரி(வயது 51), அமெரிக்காவில் உள்ள மலையுச்சியில் தனியாக இருந்த போது கடவுளை கண்டது குறித்து அவர் கூறுகையில், இயற்கையின் வினோதங்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக அரிசோனா மாகாணத்தில் உள்ள மலையுச்சிக்கு சென்றேன்.

அங்கு லகோடா இன செவ்விந்தியர்கள் என்னிடம் ஒரு கத்தியையும், ஏழு அடி நீளமுள்ள போர்வையையும் தந்து தனியாக விட்டு சென்று விட்டனர்.

என்னிடம், இரண்டு நாட்களுக்கு தேவையான குடிநீர் மட்டும் இருந்தது. அந்த பகுதியில் மலைசிங்கங்கள், விஷப்பாம்புகள், தேள்கள் அதிகமாக இருப்பினும், அந்த மலையுச்சியில் நின்று மற்ற மலைகளை ரசித்துக் கொண்டிருந்தேன்.

இரவு நேரம் வந்தபோது நான் சோர்வடைந்து விட்டதால் போர்வையை விரித்து படுத்துக் கொண்டேன். அப்போது விஷப் பாம்புகளை பற்றி எனக்கு பயம் ஏற்பட்டது. ”கடவுளே பயமாய் இருக்கிறது, எனக்கு துணையாக இரு” என சத்தமாக கூவினேன்.

அப்போது எனக்கு முன்னால் இருந்த மலைத்தொடர், ஒரு மனிதனை போல் உருமாறியது. முதுகு பக்கமாக திரும்பி நின்ற அந்த உருவத்தை பார்த்ததும் என் பயம் அகன்று விட்டது. கடவுளை, நேரில் கண்டது எனக்கு மகிழ்ச்சி அளித்தது என்று தெரிவித்துள்ளார்.

ஜிம் கெர்ரி, bruce almighty (2003) என்ற படத்தில் கடவுளை சந்திப்பதும் பின்னர் அவரே கடவுளாக மாறி நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top