புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கேமரூனில் தன் எட்டு வயது மகனுக்குப் பேய் பிடித்திருப்பதாக கருதிய தந்தையும், அவரது சகோதரியும் அவனைக் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர்.

இருவரும் அடித்து பேயை விரட்ட முயன்ற பின்னர் அவன் செத்துத் தொலையட்டும் என்று கருதி ஒரு ஹோட்டல் கார் நிறுத்துமிடத்தில் கொண்டு வந்து போட்டுவிட்டனர்.

இச்சிறுவன் யேவ்லைன்ஸ்(Yvelines) ஓட்டலின் கார் நிறுத்துமிடத்தில் ரத்தகாயங்களுடன் நடுங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்து பொறுப்பாளர் ஒருவர் பொலிசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

பொலிசார் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்து அவனிடம் விசாரித்தபொழுது தன் அத்தையும், அப்பாவும் தனக்கு பேய் பிடித்ததாக கருதி இரண்டு கையைகளை இருபுறமும் நீட்டச்சொல்லி தலையைப் பின்புறமாகக் கவிழ்த்து வைத்து கிரிக்கெட் மட்டையாலும், பெல்ட்டாலும் அடித்ததாக கூறியுள்ளான்.

இத்தகவல்களை சிறுவனிடம் விசாரணை நடத்திய பொலிசார் ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

பாரிஸ் புறநகர் பொலிசார் அந்தச் சிறுவனின் தந்தை மற்றும் அத்தையை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top