மட்டக்களப்பில் கத்தியால் குத்தி நபர் படுகொலை-சந்தேகத்தில் ஒருவர் கைது
மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் நபரொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு ஆரையம்பதி செல்வநகர் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பேரின்பநாயகம் குணசீலன் (31 வயது) என்பவரே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக