புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியாவில் நடைபெற்று வருகின்ற ஆறாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய 29வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி புனே வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டு 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி
பெற்றுள்ளது.
மொகாலி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.  இதன்படி புனே வாரியர்ஸ் அணி துடுப்பெடுத்தாடி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்கள் எடுத்தது.

இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய உத்தப்பா 37 ஓட்டங்களிலும், பின்ச் அரைசதம் கடந்து 64 ஓட்டங்களிலும் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய யுவராஜ் 34 ஓட்டங்களில் வெளியேறினார்.

இதனையடுத்து 186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதில் வோரா 22 ஓட்டங்களில் வெளியேறினார்.  மில்லர் மற்றும் மந்தீப் சிங் இருவரும் அரைசதம் கடந்து அணியை வெற்றி நோக்கி அழைத்து சென்றனர். இதில் மில்லர் 80 ஓட்டங்களிலும், மந்தீப் சிங் 77 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஆட்ட நாயகன் விருதை பஞ்சாப் அணி சார்பில் மில்லர் பெற்றுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top