புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-புனேவில் மருத்துவமனை ஒன்றில் மனநலம் சரியில்லாத பெண் கற்பழிக்கப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மகாஷ்டிராவின் புனே மாவட்டத்தை சேர்ந்த சின்ச்வாட் நகர் அருகே வால்ஹெகர்வாடியில் டாக்டர் விஷால் சோனாவானே(34) மற்றும் அவரது மனைவி டாக்டர் வர்ஷா(31) ஆகியோர் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் 22 வயது மனநலம் பாதித்த பெண் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அந்த பெண்ணை மருத்துவமனையில் பணிபுரியும் சுபாஷ் மொதாத்(22) என்பவர் கற்பழித்துள்ளார்.

இந்த விவகாரத்தை பொலிசில் தெரிவிக்காமல் இருக்க டாக்டர் தம்பதி அப்பெண்ணின் தந்தைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளனர்.

இதையடுத்து அப்பெண்ணின் தந்தை பொலிசில் புகார் கொடுக்கவே, சுபாஷை பொலிசார் கைது செய்தனர்.

மேலும் லஞ்சம் கொடுக்க முயன்ற டாக்டர் தம்பதியும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் பொலிசில் காவலில் வைக்கப்பட்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top