புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மும்பை அணிக்கெதிரான ஆறாவது ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய 28வது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இண்டியன்ஸ் அணி துடுப்பெடுத்தாடி 4 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்தது.

டெண்டுல்கர் அரைசதம் கடந்து 54 ஓட்டங்களும், ரோகித் சர்மா 73 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து 162 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் ஷேவாக்- ஜெயவர்த்தன தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் மும்பை அணியின் பந்து வீச்சை விளாசித் தள்ளினார்கள்.

அணித்தலைவர் ஜெயவர்த்தன அரைசதம் கடந்து 59 ஓட்டங்களும், ஷேவாக் ஆட்டமிழக்காமல் 13 பவுண்டரி, 2 சிக்சருடன் 95 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி ஐ.பி.எல். சீசன்-6ல் முதல் வெற்றியை ருசித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top