பிரகாஷ்ராஜ் நேர்மையான அரசியல்வாதி சுயேச்சை எம்.எல்.ஏ. வாக வென்று தொகுதி மக்களுக்கு சேவை செய்கிறார். போலி மருந்து சப்ளை செய்யும் சோனு சூட்டை பிரகாஷ்ராஜ் எச்சரிக்க மோதல் அடியாட்களுடன் பிரகாஷ்ராஜை சோனுசூட் தாக்குகிறார். இதில் அவர் செத்து விட்டதாக கருதி வெளிநாடு தப்புகிறார்.
பிரகாஷ்ராஜ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு கோமாவுக்கு போய் படுத்த படுக்கையாகிறார். பிரகாஷ்ராஜ் மகன் வளர்ந்து போலீஸ் அதிகாரி மகேஷ்பாபு ஆகிறார். தந்தையின் பிளாஷ்பேக் அவருக்கு தெரிய வருகிறது.
போலி மருந்து கடத்தல் மன்னன் மற்றும் அவனுக்கு ஆதரவாக உள்ள மந்திரி, தாதாக்கள் கூட்டத்தை மகேஷ்பாபு அடியோடு அழிப்பது அதிரடியான மீதி கதை...
மகேஷ்பாபு காமெடி ஆக்ஷனில் விளாசுகிறார் வெளிநாட்டில் தாதா கூட்டாளியை பிடிக்கபோன இடத்தில் சமந்தா மேல் காதலாகி பிறகு அவர் தாதா கும்பலைச் சேர்ந்தவர் என தவறாக புரிந்து மோதுவதும்...
உண்மை புரிந்து பின்னால் போய் வழிவதும் சுவாரஸ்யம். பிரகாஷ்ராஜ் குணமானதும் அதிர்ச்சியை தாங்கமாட்டார் என டாக்டர் எச்சரிக்க வீட்டை "லைவ் ஷோ" நடப்பது போல் மாற்றி எம்.எல்.ஏ. கெட்டப்பில் அவரை சந்தோஷப்படுத்தி தந்தை பாசத்தில் ஜீவன் சேர்க்கிறார்.
போலீஸ் கமிஷனர் சுமனை கடத்திய கும்பலுடன் ஆவேசமாக மோதி அழிப்பது அனல். சமந்தா பளிச்சிடுகிறார். பிரம்மானந்தம் போலியான ரியாலிட்டி ஷோவை நிஜம் என நம்பி நடிப்பு திறமை காட்டுவது வயிற்றை புண்ணாக்கும் சிரிப்பு.
கோட்டா சீனிவாசராவ், சோனுசுட் வில்லத்தனத்தில் கொடூரம். பிரகாஷ்ராஜ் கேரக்டரில் வாழ்கிறார். அவர் உடல் நலனுக்காக போலி லைவ் ஷோ நடத்துவது அம்சம். போலீஸ் அதிகாரியாக வரும் நாசர் அழுத்தம் பதிக்கிறார். வசனம் பலம். காட்சிகளை கலகலப்பு ஆக்ஷனில் வேகமாக நகர்த்துகிறார் இயக்குனர் ஸ்ரீனுவைட்லா.
சென்டிமென்ட் சீன்களை இன்னும் அழுத்தமாக்கி இருக்கலாம். எம்.எஸ்.தமன் இசை, கே.வி.குகன், பிரசாத் முதல்லா ஒளிப்பதிவு ஒன்ற வைக்கிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக