சுப்பர் ஸ்டாரின் மகள் சௌந்தர்யா இயக்கியுள்ள கோச்சடையான் படத்தின் புதிய ஸ்டில் ஒன்றை நேற்று சௌந்தர்யா வெளியிட்டுள்ளார். மிக நீண்ட இடைவெளியின் பின்னர் கோச்சடையான் படத்திலிருந்து ஒரு ஸ்டிலை வெளியிட்டுள்ளார் சௌந்தர்யா.
இப்புதிய ஸ்டிலுக்கு ரசிர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. எந்திரன் படத்திற்கு பின்னர் வெளியாகும் ரஜினி படம் கோச்சடையான் என்பதனால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
இதில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். வெளியாகியுள்ள புதிய ஸ்டிலில் இரண்டு ரஜினியும் இடம்பெற்றுள்ளனர்.
நேற்று வெளியான இந்த ஸ்டில் சமூகவலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு பலத்த வரவேற்பினைப் பெற்றுள்ளதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
கோச்சடையான் ஒரு முப்பரிமாண அனிமேசன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக