புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


லட்சக்கணக்கான திருநங்கைகள் கூடும் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் முக்கிய அம்சமான மிஸ் கூவாகம் போட்டி நாளை நடைபெற உள்ளது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் கொடியேற்றுதல், தாலி கட்டுதல், அரவாண் களப்பலி போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெறும்.

ஆண்டுதோறும் சித்திரை பவுர்ணமியை ஒட்டி நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான திருநங்கைகள் கூவாகத்தில் திரள்வார்கள்.

இந்நிலையில் கூத்தாண்டாவர் கோவில் திருவிழாவிற்கு வரும் திருநங்கைகளுக்காகவே மிஸ் கூவாகம் போட்டி நடத்தப்படுகிறது.

இதற்காக அழகாக அலங்கரித்துக் கொண்டு மேடையில் ஒய்யார நடை போடுவார்கள் திருநங்கைகள்.

மேலும் கூவாகம் விழாவின் முக்கிய நிகழ்வான தாலி கட்டிக்கொள்ளுதல் நாளை(ஏப்ரல் 23ம் திகதி) இரவு நடைபெறுகிறது.

இதில் மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இந்தியா முழுவதிலும் இருந்து வரும் திருநங்கைகள் பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக்கொண்டு இரவு முழுவதும் கும்மியடித்து மகிழ்வர். முன்னதாக சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

பல்வேறு நிகழ்வுகளுக்குப் பின்னர் தர்மர் பட்டாபிஷேகத்துடன் ஏப்ரல் 26ம் திகதி விழா நிறைவடைகிறது.

இந்த விழாவிற்கு வரும் திருநங்கைகளை பலரும் தவறான நோக்கத்துடன் அணுகுவதாக புகார் எழுந்துள்ளது.

எனவே விழா நேரத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது திருநங்கைகளின் கோரிக்கையாகும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top