புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொரட்டி தண்டுகானூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (40), விவசாயி. மனைவி செல்வி (32). இவர்களுக்கு கஜேந்திரன் (8) என்ற மகனும் நவீதா
(10), புவனேஸ்வரி (7) என்ற 2 மகள்களும் உள்ளனர். சண்முகத்துக்கும், அவரது சகோதரர்களான தனபால் (44), சின்னதம்பி (43), ரஜினி (28) ஆகியோருக்கு இடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் சண்முகம் விவசாய நிலத்துக்கு சென்றுவிட்டார். வீட்டில் மகன் கஜேந்திரனை செல்வி குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அந்த தண்ணீர், ரஜினிக்கு சொந்தமான இடத்தில் சென்று தேங்கியது. இதுகுறித்து அண்ணியிடம் ரஜினி கேட்டுள்ளார்.

இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரஜினி, இரும்பு ராடால் செல்வி தலையில் தாக்கியுள்ளார். அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிறுவன் கஜேந்திரனையும் தாக்கிவிட்டு ரஜினி தப்பியோடிவிட்டார்.

படுகாயம் அடைந்த சிறுவன்,திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறான்.திருப்பத்தூர் தாலுகா போலீ சார் வழக்கு பதிந்து தப்பியோடிய ரஜினியை தேடிவருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top