இத்தாலியில் மனைவியை மிகவும் தந்திரோபாய முறையில் படுகொலை செய்து உள்ளார் இலங்கைக் குடியேற்றவாசி.
இவரின் பெயர் சரத் மொறகொட. வயது 45. இவரின் மனைவி மாதுரி வர்ணகுல. வயது 42. இருவருக்கும் 08 வயது மகன் உள்ளார். தெற்கு இத்தாலியில் கரலினா என்கிற இடத்தில் உள்ள தொடர் மாடியில் வாடகைக்கு வசித்து வந்து உள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மாதுரி எரிந்த சடலம் காணப்பட்டார். இவரது கழுத்து, கணுக்கால் ஆகியவற்றை சுற்றி கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது.
மொறகொடவும் கடுமையான தீக்காயங்களுக்கு உட்பட்டு இருந்தார். ஆயினும் கட்டப்பட்டு இருக்கவில்லை.
மாதுரியின் மரணம் தொடர்பான விசாரணையை புலனாய்வாளர்கள் முடுக்கி விட்டனர்.
மொறகொட மனைவியை கொன்று விட்டு படுகொலை தடயங்களை மறைக்கின்றமைக்காக தீயை பற்ற வைத்து சடலத்தை எரித்து உள்ளார் என்று கண்டு பிடித்தனர். மகன் வீட்டில் இல்லாதபோது இவ்விபரீதம் நடந்து உள்ளது.
இத்தம்பதி கடந்த நாட்களில் கடுமையாக வாக்குவாதப்பட்டு உள்ளனர் என்பது அயலவர்களின் வாக்குமூலத்தில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக