அமெரிக்காவில் சான் ஆன்டானியோ நகரை சேர்ந்த சீசேம் என்ற 2 வயது நாய்குட்டிக்கு கண், காதை மறைக்கும் அளவிற்கு முகத்தில் அதிகமாக சதை வளர்ந்துள்ளது.
பொதுவாக சைனீஸ் ஷெர்பே வகையை சேர்ந்த நாய்குட்டிகளுக்கு துணியை சுருட்டி வைத்தது போன்று உடல் முழுவதும் சதை தொங்கி காணப்படும். ஆனால் அவ்வகைச் சேர்ந்த சீசேமுக்கு மிக அதிமாக சதை வளர்ந்து கண்ணையும், காதையும் மறைக்க தொடங்கியதால் பார்வை தெரியாமலும், காது கேட்காமலும் மிகவும் சிரமப்பட்டுள்ளது.
மேலும் சதையின் திரட்சிகள் அதிகம் இருந்ததால் நோய்த் தொற்றி சிரங்கும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சான் ஆன்டானியோ நகரை சேர்ந்த கருணை மையத்தின் ஏற்பாட்டின் பேரில் உள்ளூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சீசேம் நாய்குட்டி சேர்க்கப்பட்டது. அதை பரிசோதித்த டொக்டர்கள் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதன் மூலம் சீசேமுக்கு 2 முறை அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அதிகம் இருந்த சதைகள் அகற்றப்பட்டுள்ளன. தற்பொழுது அதன் கண், காது நன்றாக திறந்துள்ளன. சீசேமுவால் இனி நன்கு பார்க்க முடியும், கேட்க முடியும் என்று டொக்டர்கள் கூறியுள்ளனர்.
இனி சீசேமுவை யாரேனும் தத்தெடுக்கலாம் என்று ஆன்டானியோ கருணை மையம் அழைப்பு விடுத்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக