மூன்று மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் சவூதி அரேபியாவுக்கு பணிப் பெண்ணாக சென்று உள்ளமை தெரிய வந்து உள்ளது.
மஸ்கெலியாவை சேர்ந்த திருமணமான 33 வயது தமிழ் பெண் ஒருவர் இரு வாரங்களுக்கு முன் ரியாத் சென்று உள்ளார்.
தலைநகரத்தில் மருத்துவ பரிசோதனைக்கு இவர் உட்படுத்தப்பட்டார்.
இவர் கர்ப்பம் அடைந்து இருக்கின்றமை அப்போது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனால் பேரதிர்ச்சி அடைந்த எஜமானன் இப்பெண்ணை இலங்கைத் தூதரகத்தில் கையளித்தார்.
இப்பெண்ணை சவூதிக்கு வரவழைக்கின்றமைக்கு எஜமானன் 20000 சவூதி ரியாலை செலவு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பெண் கொழும்பில் அரச அங்கீகாரம் பெற்ற வைத்தியசாலையில் பிரயாணத்துக்கு முன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே சவூதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றார். ஆயினும் இவர் கர்ப்பிணி என்பதை வைத்தியசாலை மறைத்து விட்டது என்றே நியாயமாக சந்திக்க வேண்டி உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக