புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா -டெல்லியில் இரண்டு காமக்கொடூரர்களால் கற்பழிக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கிழக்கு டெல்லியில் காந்தி நகரைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமி கடந்த 15ம் திகதி தனது வீட்டு வாசலிலிருந்து கடத்தப்பட்டு இரண்டு நபர்களால் மிகக் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டுள்ளார்.

காமக் கொடூரரிடமிருந்து காப்பாற்றப்பட்ட சிறுமி தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சிறுமிக்கு நடந்த கொடூரங்கள்:

சிறுமியை மனோஜ் மற்றும் பிரதீப் இயற்கைக்கு புறம்பான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்பு மர்ம உறுப்புகளை சேதப்படுத்தி அதன் வழியாக சிறுமியின் உடலுக்குள் 200 மில்லி லிற்றர் போத்தல் மற்றும் மெழுகுவர்த்தி துண்டுகளை திணித்துள்ளனர்.

மருத்துவர்கள் போத்தல் மற்றும் மெழுகுவர்த்தி துண்டுகளை அகற்றிவிட்டனர். 5 வயது சிறுமிக்கு இவ்வளவு கொடுமை நடந்துள்ளதை தனது வாழ்நாளில் பார்த்ததில்லை என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் மர்ம உறுப்புகள் பலத்த சேதமடைந்துள்ளதால் அதை அறுவை சிகிச்சை மூலமே சரி செய்ய முடியும். சிறுமியின் குடலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மேலும் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

1 கருத்து:

 
Top