மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் புதையல் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாக தெரிவிக்கப்படும் ஆறு சந்தேக நபர்களை வாகரை இராணுவத்தினர் இன்று கைது செய்துள்ளனர்.
கிருமிச்சை சின்னக்கல் என்னும் காட்டு மலைப்
பகுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்கள் சிலர், மலைப் பகுதியை மாலை ஜந்து மணியளவில் உடைத்துக் கொண்டிருப்பதை கண்ட பொது மக்கள், இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த நபர்கள் தப்பியோட முயச்சித்த வேளை மியான் குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள், முச்சக்கர வண்டி மற்றும் சந்தேக நபர்களை இராணுவத்தினர், வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்களை நாளை வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக