ஜேர்மனியில் பாடன் உர்டெம்பெர்க்(BadenWürttemberg) மாநிலத்திலுள்ள ஃவெல்பேச்(Fellbach) என்ற இடத்தில் 48 வயது கடத்தல்காரர் ஒருவர் ஆறு லட்சம் பணத்திற்காக பள்ளியிலிருந்து திரும்பி கொண்டிருந்த 7 வயது சிறுவனை கடத்தியுள்ளார்.
அச்சிறுவனின் தந்தையிடம் தொலைப்பேசியின் மூலம் பேசிய அக்கடத்தல்காரர், காரில் வைத்து ஆறு லட்சம் பணத்தை கொண்டு வரும்படி உத்தரவிட்டுள்ளார்.
முதலில் தயங்கியவர் பின்னர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பொலிசார் அந்த அலைப்பேசி எண்ணை கண்டறிந்து சோதனை நடத்தியுள்ளனர்.
அதன் பின்னர் அந்தக் கடத்தல்காரர் ஒரு அடுக்குமாடி கட்டிடத்திலுள் இருந்தது தெரியவந்தது. பொலிசாரின் பாதுகாப்பான அணுகுமுறையினால் அக்கடத்தல்காரரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
தற்பொழுது அச்சிறுவன் பாதுகாப்பாக குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
0 கருத்து:
கருத்துரையிடுக