புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-கரூர் மாவட்டம், வெள்ளியணையை அருகிலுள்ள தாளப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகாந்த் (29). இவர் தரகம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.


பக்கத்தில் உள்ள மாவத்துரைச் சேர்ந்த பழனிப்பன் மகள் சரிதா (29) என்பவரும், ஆசிரியர் விஜயகாந்த்தும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஆசிரியர் விஜயகாந்த் சரிதாவை கைவிட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்துள்ளார்.

இதில் கேள்விப்பட்ட சரிதா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கரூர் கலெக்டர் ஜெயந்தியிடம் மனு அளித்தார். அவர் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, குளித்தலை மகளிர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

குளித்தலை மகளிர் பொலிஸார், இரண்டு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சரிதாவை விரைவில் திருமணம் செய்து கொள்வதாக விஜயகாந்த் பொலிஸாரிடம் உறுதி அளித்தார். அதேசமயம் விஜயகாந்துக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்துள்ளது.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த சரிதா, நேற்று முன்தினம் மாலை முதல், தாளப்பட்டியில் உள்ள காதலன் விஜயகாந்த் வீட்டு முன் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவலறிந்த வெள்ளியணை பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று, சரிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வேறு பெண்ணை திருமணம் செய்ய நடக்கும் முயற்சிகளை நிறுத்திவிட்டதாகவும், உடனடியாக உங்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் உறுதியளித்தனர். இதையடுத்து சரிதா தனது தர்ணா போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top