ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 27-வது லீக் நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூர் எம்.சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
நாணயச் சுழற்சியில் வென்ற பெங்களூர் அணி தலைவர் விராட் கோலி களத்தடுப்பை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த வாட்சன்- ரகானே தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
வாட்சன் 6 ஓட்டங்களிலும், ரகானே 14 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு டிராவிட்- பின்னி ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். ராஜஸ்தான் அணியின் ஓட்டம் 66 ஆக இருக்கும்போது பின்னி 33 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
அனதபின் 4-வது விக்கெட்டுக்கு டிராவட்டுடன் ஹாட்ஜ் ஜோடி சேர்ந்தார். டிராவிட் 35 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழக்க ராஜஸ்தான் அணி 19.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
பெங்களூர் அணி தரப்பில் வினய்குமார், ஆர்.பி.சிங் தலா 3 விக்கெட்டுகளும், ராம்பவுல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
118 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூர் அணி துடுப்பெடுத்தாடியது. கெய்ல்- தில்சான் தொடக்க வீரர்களாக இறங்கினார்கள். இருவரும் பெங்களூர் அணிக்கு சிறப்பாக தொடக்கம் கொடுத்தனர்.
பெங்களூர் அணியின் ஓட்டம் 53 ஆக இருக்கும்போது தில்சான் 25 ஓட்டங்களில் வாட்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து விராட் கோலி, கெய்ல் உடன் ஜோடி சேர்ந்தார். கோலி 1 ஓட்டம் எடுத்த நிலையில் பால்க்னர் பந்தில் வெளியேறினார். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு டிவில்லியர்ஸ் வந்தார். இவர் 7 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு கெய்ல் உடன் திவாரி ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் கெய்ல் நிலைத்து நின்று விளையாடினார். இதனால் பெங்களூர் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 123 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கெய்ல் 49 ஓட்டங்களுடனும், திவாரி 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ராஜஸ்தான் அணி சார்பில் வாட்சன் 2 விக்கெட்டும், பால்க்னர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக